இலங்கையில் மின்வெட்டு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லையென
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் இன்று 6ஆவது நாளாகவும் நடைபெற்றுவரும் நிலையில், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்களின் செலவினத் தலைப்புகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.