கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் உயிரிழந்த மரணங்களின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது. திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறிஞ்சாக்கேணி பகுதியை சேர்ந்த ரபீஸ் பாத்திமா நபா வயது (06) சிகிச்சை பலனின்றி நேற்று (27) உயிரிழந்துள்ளார்.
கடந்த 23.11.2021 அன்று காலை இடம் பெற்ற படகு விபத்தின் போது தி/கிண்ணியா அல் அஷ்கர் வித்தியாலயத்தில் தரம் 1 ல் கல்வி பயிலும் மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.