சுகாதார வழிமுறைகளை மீறி ஆர்ப்பாட்ட பேரணி நடத்திய ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார்.
இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களை ஒன்றிணைத்துக்கொண்டு, ஐக்கிய மக்கள் சக்தியினால் கொழும்பில் நேற்று பாரிய ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.