மண்சரிவு அபாயம் நிலவும் கொழும்பு − கண்டி பிரதான வீதியின் பஹல கடுகண்ணாவ பகுதியிலுள்ள பிரதான ரயில் மார்க்கத்தை அண்மித்த பகுதியில் மண்சரிவு ஏற்படும் அபாயம் நிலவி வருவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிக்கின்றது.
இந்த மண்சரிவு அபாயம் காரணமாக குறித்த ரயில் மார்க்கத்தின் ஊடான ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிடுகின்றது.
இந்த நிலையில், குறித்த பகுதியில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் ஆய்வுகளை ஆரம்பித்துள்ளனர்.
இதன்படி, மண்சரிவு அபாயம் காணப்படும் பகுதியிலுள்ள மலையக மார்க்க ரயில் தண்டவாளத்திற்கு அருகில் மண்சரிவு ஏற்படுவதற்கான நிலைமை உருவாகி வருவதாக அந்த நிறுவனத்தின் தொழில்நுட்ப நடவடிக்கை தொடர்பான பணிப்பாளர் R.M.S.பண்டார கூறுகின்றார்.
குறித்த பகுதியில் மிக நீண்ட காலமாக இருந்த மண்மேடுகள் மற்றும் கற்கள் படிப்படியாக சரியும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
நீர் வடிந்தோடும் திட்டமொன்று முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.