தேசிய கண் வைத்தியசாலையிலேயே கைதிகளுக்கு கண்தொடர்பான அறுவை சிகிச்சை செய்யும் நடவடிக்கை இவ்வளவு காலமும் முன்னெடுக்கப்பட்டது. கைதுகளுக்கு சிகிச்சையளிக்கும்போது சிறைச்சாலை அதிகாரிகளின் விசேட பாதுகாப்பின் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்பட்டது. சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து செலவு ஆகிய பிரச்சினைகளினாலும் சரியான நேரத்துக்கு உரிய சிகிச்சைகளை வழங்க முடியாத நிலை இருந்தது.
இந்த பிரச்சினைகளுக்கு தீர்வாக சிறைச்சாலை வைத்தியசாலையிலேயே கண் தொடர்பான சிகிச்சைகளை முன்னெடுப்பதற்கு நீதி அமைச்சர் அலி சப்ரியின் ஆலோசனைக்கமைய, சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல் தெனியவின் வழிகாட்டலில் இன்று (18) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய மாற்றத்தினூடாக மாதாந்தம் 20 கைதிகளுக்கு கண் தொடர்பான அறுவை சிகிச்சையளிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.