மண்சரிவு அபாயம் காரணமாக மூடப்பட்ட கொழும்பு - கண்டி வீதியில் மாவனெல்ல மற்றும் கடுகண்ணாவ பகுதிக்கு இடையிலான பகுதி மேலும் மூடப்படவுள்ளது.
கேகாலை மாவட்ட செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய இதை தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த இடத்தில் பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் சர்தா வீரகோன் தெரிவிக்கின்றார்.
இவ்வாறு நடத்தப்பட்ட பரிசோதனைகள் தொடர்பான விசேட அறிவிப்பை எதிர்வரும் திங்கட்கிழமை வெளியிட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.