இதுவரையில் டெங்கு காய்ச்சல் காரணமாக 24 சிறுவர்கள் மேற்படி வைத்தியசாலையில், சிகிச்சை பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு காய்ச்சல் மேலும் அதிகரிக்கக்கூடும்.
எனவே நோய் அறிகுறிகள் தென்படும்பட்சத்தில், உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறும் அவர், பொதுமக்களைக் கோரியுள்ளார்.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 16,174 டெங்கு நோயாளர்கள் பதிவாகிள்ளதாக தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.
அவர்களில் 47.4 சதவீதமானோர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாகவும் அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.