அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டத்தை எதிர்ப்பது என்ற கட்சி உயர்பீடக் கூட்டத்தின் தீர்மானத்தை கட்சி எம்.பிக்கள் மீறினால், அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி. தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது.
நேற்றுமுன்தினம் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸின் கூட்டத்தில் பேசிய உயர்பீட உறுப்பினர்கள் அனைவரும் அரசின் வரவு செலவுத் திட்டத்தை எதிர்க்கவேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.
அதேபோல் 20ஆவது திருத்தத்திற்கு ஆதரவளித்த எம்.பிக்கள் மீது அப்போதே கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், இந்த நிலை இன்று ஏற்பட்டிருக்காதென பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனையடுத்து, இம்முறை பட்ஜெட்டை ஆதரவளிக்கும் எம்.பிக்களிடம் விளக்கத்தைக் கோரி அதன்பின்னர் அந்த விளக்கம் திருப்தியில்லாத பட்சத்தில் அவர்களின் கட்சி உறுப்புரிமையை நீக்குவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இம்முறை கட்சியின் தீர்மானத்தை கடுமையான நிலைப்பாட்டிலிருந்து அமுல் படுத்துவதென ஹக்கீம் தீர்மானித்துள்ளார்.