நீதியமைச்சர் பதவியிலிருந்தும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையிலிருந்தும் விலகுவது தொடர்பான கடிதத்தை அமைச்சர் அலி சப்ரி தயாரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கடிதத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்க அலி சப்ரி சென்றிருந்ததாகவும் சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஒரு நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியின் தலைவராக வண.கலகொட அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
எவ்வாறாயினும், அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ய தாம் தீர்மானிக்கவில்லை என அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.