நாட்டின் வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி 9.2 வீதமாக குறைந்துள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத்திட்டம் தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
வருமானம் இன்றி நாடு இயங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. மிகவும் கஷ்டமான நிலைமையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டம் என்ற போதிலும் அதிகளவான நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும் விவசாய மக்களின் பசளை பிரச்சினை சம்பந்தமாக அரசாங்கம் துரிதமான தீர்வை வழங்கும் என எதிர்பார்க்கின்றேன் எனவும் இந்த பிரச்சினையானது கட்டாயம் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.