மொனராகலை மாவட்டத்தில் நேற்று (13) கொரோனா நோயாளர்கள் 84 போ் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மொனராகலை சுகாதார சேவை பணிப்பாளர் துஷித அத்தநாயக்க தெரிவித்தாா்.
இதுவரையில் மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் மாத்திரம் 34 கொரோனா நோயாளர்கள் சிகிச்சைப் பெற்று வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மெதகம பொலிஸ் நிலையத்தில் 11 அதிகாரிகளுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.