இலங்கை போக்குவரத்து சபை (SLTB) செத்சிறிபாய வளாகத்தில் இருந்து பல புதிய பஸ் சேவைகளை ஆரம்பித்துள்ளது.
பத்தரமுல்லை அதனை அண்டிய பகுதிகளில் அமைந்துள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் போக்குவரத்து நலனுக்காக போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் பணிப்புரையின் பேரில் இந்த சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதன்படி செத்சிறிபாயவை மையமாகக் கொண்டு கிரிந்திவெல, யக்கல, கட்டுநாயக்க, பாதுக்க, மத்துகம, ஹொரனை, அவிசாவளை, நிட்டம்புவ, கொழும்பு கோட்டை, தெமட்டகொடை புகையிரத நிலையம் மற்றும் கடவத்தை ஆகிய பகுதிகளுக்கு 11 பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
புதிய அலுவலக போக்குவரத்து சேவையை போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி நேற்று செத்சிறிபாய வளாகத்தில் இருந்து ஆரம்பித்து வைத்தார்.