முல்லைத்தீவு தீர்த்தக்கரைப்பகுதியில் வீதியால் சென்ற ஆறு வயதான சிறுமியை பாழடைந்த வீட்டிற்குள் இழுத்து சென்ற 17 வயதான இளைஞனை, முல்லைத்தீவு பொலிஸார் கைதுசெய்துள்ளார்கள்.
தீர்த்தக்கரை அன்னைவேளாங்கன்னி ஆலயத்துக்கு அருகிலேயே இந்த சம்பவம் இன்று (18) இடம்பெற்றுள்ளது.
கடைக்குச் சென்று திரும்பிய சிறுமியினை கூப்பிட்டு வாயைப் பொத்தி அருகிலுள்ள பாழடைந்த வீட்டுக்குள் இழுத்து சென்றுள்ளார். இந்நிலையில், கையை தட்டிவிட்டு ஓடிவெளியே வந்த சிறுமி, சத்தமிட்டுள்ளார். அதன்பின்னர், அயலவர்கள் ஓடிவந்து காப்பாற்றியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், 17 வயதான இளைஞனை கைது செய்து, விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.