Our Feeds


Thursday, November 11, 2021

SHAHNI RAMEES

கொரோனா சட்டத்தை மீறி தலவாக்கலையில் கோவில் திருவிழா


 தேவையற்ற விதத்தில் மக்களை ஒன்று திரட்டி, முன்னெடுக்கப்படும் சமய நிகழ்வுகளின் ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவிக்கின்றார்.

தலவாகலை பகுதியிலுள்ள ஆலயமொன்றில் இடம்பெற்ற உற்சவமொன்றில் பெருந்திரளானோர் கலந்துக்கொண்டிருந்ததாகவும் அவர் கூறுகின்றார்.

இந்த உற்சவத்தை நடத்துவதற்கு அனுமதி பெற்றுக்கொள்ளப்படவில்லை என அறிய கிடைப்பதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

நாட்டில் தற்போது வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டலுக்கு அமைய, இவ்வாறான உற்சவங்களை செய்வது தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இந்த உற்சவத்திற்கு அதிகளவிலான மக்கள் ஒன்று கூடியதன் ஊடாக, சுகாதார ஆலோசனைகள் மீறப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

எதிர்வரும் தினங்களில் இந்த உற்சவத்தை நடத்திய தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.

இதற்கு முன்னரும் இவ்வாறு உற்சவங்களை நடத்திய தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை தாம் எடுத்ததாகவும் அவர் நினைவூட்டினார்.

இவ்வாறு மக்கள் ஒன்று கூடும் வகையிலான நிகழ்வுகளை நடத்த வேண்டாம் என தாம் அனைத்து தரப்பிடமும் கோரிக்கை விடுப்பதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவிக்கின்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »