மீண்டும் எரிபொருள் விலை சூத்திரமொன்றை அமுலுக்கு கொண்டுவரவேண்டுமென அரசாங்கம் மற்றும் நிதி அமைச்சருக்கு யோசனை முன்வைப்பதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தாா்.
இலங்கையின் எரிபொருள் விலையை உலக சந்தையுடன் ஒப்பிடும் போது முறையான விலை அதிகரிப்பு முறையொன்றை எமது நாட்டிலும் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டாா்.
மத்திய வங்கி இதுதொடர்பில் அறிவித்திருப்பதாகவும் அதுதொடர்பில் ஆராய வேண்டும் என்றும் அமைச்சர் அலி சப்ரி வலியுறுத்தினாா்.
வரவு செலவுத் திட்டம் மீதான இன்றைய விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டாா்.