கொவிட் ஒமிக்ரோன் வைரஸ், உலகின் பல நாடுகளை தாக்க ஆரம்பித்துள்ள நிலையில், ஜப்பான் தனது எல்லைகளை மூடுவதற்கு தீர்மானித்துள்ளது.
இதன்படி, சுற்றுலா பயணிகள், வெளிநாட்டு வர்த்தகர்கள், மாணவர்களுக்கான விஸாக்களுக்கு ஜப்பான் அனுமதி வழங்குவதை நிறுத்தியுள்ளது.
தமது நாட்டு பிரஜைகளை காப்பாற்றும் நோக்கிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அந்த நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் வாழும் ஜப்பான் பிரஜைகளுக்கு இந்த நடைமுறை பொருந்தாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒமிக்ரோன் வைரஸ் தாக்கத்தை அடுத்து, இஸ்ரேல் தனது எல்லையை மூடியிருந்தது.
இஸ்ரேலுக்கு அடுத்ததாக ஜப்பான், தனது எல்லையை மூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.