அருட்தந்தை சிறில் காமினி தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமைகள் மனுவை எதிர்வரும் 8 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் தான் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி அருட்தந்தை சிறில் காமினி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமைகள் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.