தென் ஆபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒமிக்ரோன் புதிய கொவிட் வைரஸ் புறழ்வானது, இலங்கைக்குள் வருவதை தாமதப்படுத்த
வேண்டும் என ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை பிரிவின் பிரதானி டொக்டர் சந்திம ஜீவந்தர தெரிவிக்கின்றார்.இந்த வைரஸ் இலங்கைக்குள் வருகைத் தரும் பட்சத்தில், அதனை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எந்தவொரு வைரஸ் பிறழ்வும், நாட்டிற்குள் வருவதை தடுத்து நிறுத்த முடியாது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த வைரஸை கண்டுபிடிப்பதற்கான ஆய்வுகளை நடத்தும் ஆய்வு கூட வசதிகள் இலங்கையில் உள்ளதாகவும், இது தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார்.
அரசாங்கத்தினால் தற்போது முன்னெடுக்கப்படும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை வெற்றியளித்துள்ளதாக கூறிய அவர், வெளிநாடுகளிலிருந்து பயணிகள் வருகைத் தரும் போது பின்பற்றப்படும் சுகாதார வழிமுறைகள் போதுமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.