திபதி பணிபுரைக்கமைய ஸ்தாபிக்கப்பட்ட கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை முகாமை செய்வதற்கான ஜனாதிபதி
செயலணிக்கு புதிய உறுப்பினர்கள் மூவர் நியமிக்கப்பட்டுள்ளனா்.இவர்கள் மூவரும் மூவினத்தை பிரதிநிதித்துவம் படுத்தும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன் அதுதொடர்பான வர்த்தமானியும் ஜனாதிபதியின் செயலாளா் பீ.பி. ஜயசுந்தரவினால் வெளியிடப்பட்டுள்ளது.
நில அளவையாளா் ஆரியரத்ன திசாநாயக்க, ஓய்வுபெற்ற மாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், விரிவுரையாளா் முபிசால் அபூபக்கா் ஆகியோர் இந்த ஜனாதிபதி செயலணியின் புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.
இந்த ஜனாதிபதி செயலணி கடந்த வருடம் ஜூன் மாதம் முதலாம் திகதி நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செயலணியின் உறுப்பினர் கட்டமைப்பை விரிவாக்கும் நடவடிக்கைகளுக்கமைய இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன் செயலணியின் உறுப்பினராக கடமையாற்றி வரும் நில அளவையாளா் நாயகம் எம்.எஸ்.பீ. தென்னக்கோன் அரச சேவையிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.