Our Feeds


Wednesday, November 3, 2021

ShortNews Admin

கொழும்பு பல்கலைக்கழக வேந்தராக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் நியமனம் - பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் கடும் எதிர்ப்பு



கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக முருத்தெட்டுவே ஆனந்த தேரரை நியமித்தமைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக பல்கலைக்கழக மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பில் குறித்த சங்கத்தினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.


அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,


“பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்பது எந்தவொரு பல்கலைக் கழகத்திலும் மிகவும் கௌரவமான மற்றும் உயர்ந்த பட்டமாகக் கருதப்படுகிறது.


வேந்தர் பதவிக்கு சட்டப்பூர்வமாக நிர்வாக அதிகாரங்கள் இல்லை என்றாலும், பல்கலைக்கழகத்தின் கௌரவத்தின் அடையாளமாக, குறிப்பாகப் பட்டமளிப்பு விழாவின் போது தலைமை வகிப்பவர் வேந்தராக கருதப்படுவார். கொழும்பு பல்கலைக்கழகத்தின் அடுத்த அதிபராக முருத்தெட்டுவே ஆனந்த தேரரை அரசாங்கம் நியமித்துள்ளது.


எவ்வாறாயினும், கொழும்பு பல்கலைக்கழக மாணவர் சங்கம் மற்றும் மாணவர் சமூகம் குறித்த நியமனத்தை நாங்கள் எதிர்க்கின்றோம்.


ஏனென்றால், பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவி என்பது அரசியல் நியமனமாகவோ அல்லது அரசியல் நிகழ்ச்சி நிரலாகவோ இருக்கக் கூடாது என்று நாங்கள் நம்புகிறோம்.


இந்தப் பின்னணியில்தான் பல்கலைக்கழக நிர்வாகத்தின் சுதந்திரம் மற்றும் மரியாதை உள்ளது. அந்த நிலையில்தான் பாதுகாப்பு இருக்கிறது.சுதந்திரம், பாதுகாப்பு மற்றும் கௌரவ மிக்கதாகக் காக்கப்படுகிறது.


ஆனால் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவிக்கான அரசியல் நியமனம் பல்கலைக்கழக நிர்வாகத்தின் சுதந்திரம் மற்றும் பல்கலைக்கழகத்தின் கௌரவம் ஆகிய இரண்டையும் அழித்துவிடும் என்று நாங்கள் நம்புகிறோம்.


எனவே, பல்கலைக்கழக வரலாற்றில் புகழ்பெற்ற ,பல்கலைக்கழகமாகவும் கௌரவமிக்க பல்கலைக்கழகமாகவும் விளங்கும் கொழும்புப் பல்கலைக்கழகத்துக்கு இந்த அரசியல் நியமனம் வழங்கப்படுவதற்கு மாணவர் ஒன்றியம் என்ற வகையிலும், முழு மாணவர் அமைப்பின் சார்பிலும் எமது கடும் எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்கிறோம். என்று குறிப்பிட்டுள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »