புதிய வகையான கொரோனா வைரஸ் பிறழ்வு பரவும் நிலையில், நாட்டை முடக்குவது தொடர்பில் இன்னும் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை. – என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
நாட்டை மூடுவதற்கான பரிந்துரை சுகாதார தரப்புகளால் முன்வைக்கப்படவில்லை. அதற்கான தேவை தற்போது எழவில்லை. அவ்வாறு செய்வதற்கும் எதிர்ப்பார்க்கவில்லை.
எனவே, பொது முடக்கம் என்ற நிலைக்கு நாடு செல்லாமல் இருக்கும் வகையில் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும்.” – என்றும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார்.