ஒமிக்ரொன் வைரஸ் சர்வதேச அளவில் பரவ வாய்ப்புள்ளதாகவும், இது “கடுமையான விளைவுகளை” ஏற்படுத்தக்கூடும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் சற்றுமுன்னர் அறிவித்துள்ளது.
இதனால் தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்தவும், அத்தியாவசிய சுகாதார சேவைகள் நடைமுறையில் இருப்பதை உறுதிப்படுத்தவும் உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது.
“ஒமிக்ரொன் வைரஸ் முன் அறிகுறிகளற்ற பல பிறழ்வுகளைக் கொண்டுள்ளது .இதனால் ஒட்டுமொத்த உலகளாவிய ஆபத்து மிகவும் அதிகமாக மதிப்பிடப்படுகிறது.” என்றும் மேற்படி ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.