ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினர்களுக்கும் இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று 19ம் திகதி அனுராதபுரத்தில் அமைந்துள்ள அமைச்சரின் இல்லத்தில் வைத்து இடம்பெற்றது.
இதன்போது ஆளும் பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்து தற்போதைய சூழ்நிலையில் தொடர்ந்தும் எமது அரசியல் மற்றும் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றி கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் முபாறக் அப்துல் மஜீத் , உப செயலாளர் முஜாஹித் முஹம்மது, தேசிய அமைப்பாளர் முஹம்மது சதீக் மற்றும் கொள்கை பரப்பு செயலாளர் ஸப்வான் முஹம்மது சல்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.