கண்டி அதிவேக வீதியின் மீரிகம முதல் குருநாகல் வரையான பகுதியை எதிர்வரும் 28ம் திகதி திறக்கவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவிக்கின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோரினால் இந்த வீதி திறக்கப்படவுள்ளது.
40 KM தூரத்தை கொண்ட மீரிகம முதல் குருநாகல் வரையான பகுதி, 4 போக்குவரத்து வழிகளை கொண்டமைக்கப்பட்டுள்ளது.
இந்த வீதியில் 5 நுழைவாயில்கள் காணப்படுகின்றன.
மீரிகம, நாகலகமுவ, தம்போக்க, குருநாகல் மற்றும் யக்கபிட்டிய ஆகிய பகுதிகளில் நுழைவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கண்டி அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகள் 2017ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.