நேற்று (17) மாலை இவர்கள் இவ்வாறு திசைமாறி சென்றுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
பொகவந்தலாவ மாவெளி வனப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் காடுகளை அழித்து சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு மேற்கொள்ளப்படுவதாக கிடைக்கபெற்ற இரகசிய தகவலுக்கமைய நுவரெலியா மாவட்டத்தில் உள்ள இரண்டு குழுக்களை சேர்ந்த வனப்பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் 15 பேர் நேற்று மாலை மாவெளி வனப்பகுதிக்குள் பிரவேசித்தனர்.
இரண்டு குழுவினரும் வனபகுதிக்கு பிரவேசித்த வேளை பனிமூட்டம் மற்றும் தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்ள முடியாத ஒரு நிலைமையும் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது ஒரு குழுவினர் வனப்பகுதியில் திசைமாறி சென்றுள்ள நிலையில் நேற்று இரவு தொடக்கம் இன்று காலை வரை அவர்கள் வனப்பகுதியில் கூடாரம் அமைந்து தங்கி இருந்துள்ளனர்.
அதன் பிறகு இன்றைய தினம் அதிகாலையில் திரைமாறி சென்ற குழுவினர் எவ்வித பாதிப்பும் இன்றி வந்ததாக வனப்பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.
அதன் பிறகு வனபாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்களின் வாகனங்கள் ஊடாக அவர்கள் பொகவந்தலாவ நகரத்திற்கு அழைத்து வரப்பட்டமை குறிப்பிடதக்கது.