இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான ஏற்பாடுகளை வகுக்கும் நோக்கியல் பிரத்தியேக தரவு பாதுகாப்பு சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டதன் பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதனூடாக, அரச நிறுவனங்கள், வங்கிகள், தொலைபேசி சேவை வழங்குநர்கள் மற்றும் மருத்துவமனைகளால் சேகரிக்கப்பட்டு பயன்படுத்தப்படும் பிரத்தியேக தரவுகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொழில்நுட்ப அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.