தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ . சுமந்திரன் தலைமையிலான குழுவினருடன் நடத்திய பேச்சுக்கள் குறித்து அமெரிக்க இராஜாங்க திணைக்களம் ட்வீட்டர் பதிவொன்றை இட்டுள்ளது.
´முழுமையான நிலைமாற்று நீதி நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆக்கப்பூர்வமான பேச்சு நடத்தப்பட்டது. இலங்கையில் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கு சிறுபான்மை குழுக்களின் ஆலோசனைகள் மற்றும் கரிசனையை கேட்பது அவசியம்.’
என்று அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.