Our Feeds


Monday, November 8, 2021

ShortNews Admin

ரம்பொடை பகுதியில் பாரிய மண்சரிவு – போக்குவரத்து தடை



நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் அடை மழையால் ஆங்காங்கே பாதைகளிலும், விவசாய காணிகளிலும், வீடுகளுக்கு அருகிலும் மண்சரிவு சம்பவங்கள் இடம்பெற்றுவருகின்றன.


இன்று ( 8) திங்கட்கிழமை காலை 7 மணியளவில் நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் இறம்பொடை நகருக்கு அருகிலுள்ள பாதையில் மண்மேடொன்று சரிந்து விழுந்துள்ளது.


இதனால் போக்குவரத்து சில மணித்தியாலயங்கள் தடைபட்டது. வாகனங்களில் சென்றவர்களும் அப்பிரதேச கிராம மக்களும் இணைந்து சரிந்து விழுந்த மரங்களையும் மண்ணையும் அகற்றி பாதையை துப்பரவு செய்தனர். அதன் பின்னர் போக்குவரத்து வழமைக்கு திரும்பியது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »