கிண்ணியாவில் இழுவை படகு பாதை கவிழ்ந்ததில் பாடசாலை மாணவர்கள் உட்பட அறுவர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
கிண்ணியா நகர சபை பிரதேச சபையையும் இணைக்கும் பாலமே குறிஞ்சாக்கேணி பாலம் இக் குறிஞ்சாக்கேணிப் பால நிர்மாண வேலைகள் இடம்பெறுவதால் தற்காலிகமாக சேவையில் ஈடுபட்ட மோட்டார் இழுவைப் படகு உடைந்து, கவிழ்ந்ததில் பலர் நீரில் மூழ்கினர்.
இதன்போதே பாடசாலை மாணவர்கள் நால்வர் உட்பட அறுவர் உயிரிழந்துள்ளனர். காப்பற்றப்பட்டவர்கள் கிண்ணியா தள வைத்தியசாலைக்கு எடுத்துச் செலல்ப்பட்டனர்.