ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்தால் நாளைக்காக இருந்தாலும் அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராக இருப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளாா்.
அநுராதபுரம் பிரதேசத்தில் இன்று (19) இடம்பெற்ற கட்சி கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளாா்.
கடந்த இரு வருடங்களில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள், தவறிய திட்டங்கள் போன்வற்றை மீள்பரிசீலனை செய்வது தொடர்பில் ஜனாதிபதி மீண்டும் சிந்திக்க நேர்ந்துள்ளது. அவற்றை பற்றி சிந்தித்து எதிர்வரும் மூன்று வருடங்களில் அவற்றை முறையாக திட்டிமிட்டு பயணித்தால் அவருக்கும் அவரது பெயருக்கம் சிறப்பு.
இது நாம் உருவாக்கிய அரசாங்கம். அநீதிகளும் இருக்கின்றன. பிரதேச சபைகளில் வரவு செலவுத் திட்டத்துக்கு எமக்கு ஆதரவு கிடைக்காது போல் தெரிகிறது. சுயாதீனமான தீர்மானம் எடுக்க வேண்டும். இந்தக் கட்சி அதற்கு எதிராக ஒழுக்காற்று ஒழக்காற்று நடவடிக்கை எடுக்க போவதில்லை. நாம் தான் அதற்கு பதில் வழங்க வேண்டும்.
அடுத்தது கிராமத்தில் உள்ள கிளை அலுவலகங்களில் தான் உங்கள் பங்கு. அதையே தற்போது நாம்செய்ய வேண்டும். நாம் இங்கிருந்து வெளியேற வேண்டும்.
அரசாங்கத்திலிருந்து வெளியேறுநவது தொடர்பில் நாளை முடிவெடுத்தாலும், நன்றாக மதிப்பாய்வு செய்து முடிவெடுக்குமாறு மத்திய குழுவுக்கு அறிவித்துள்ளோம். இதுதொடர்பில் நாளைய தினமே இந்த பதிவிகளை இராஜிநாமா செய்துவிட்டு வெளியுறுவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. இதுதொடர்பில் ஏற்கனவே கூறியுள்ளோம். கட்சி என்ற முறையில் நாங்கள் அந்த முடிவை எடுப்போம் என்றாா்.
இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க கருத்து தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்து போட்டியிட வேண்டுமென பலமுறை கட்சிக்குள் பேச்சுவாரல்த்தை நடத்தியுள்ளோம். ஆனால் எமது தேர்தல் பிரசாரத்தில் எமக்கு ஓரளவு பலம் இருப்பதை அவர்கள் புரிந்துகொண்டிருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் நாங்கள் வெளியேற தயார் என்பதை உறுதியாக கூற வேண்டும் என்றாா்.