முட்டை விலை கடந்த சில தினங்களில் அதிகரித்துள்ளதாக சில்லறை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
முட்டைகளுக்கான மொத்த விலை அதிகரித்துள்ளதால், சில்லறை விலை 23 ரூபாவிலிருந்து 25 ரூபவரையில் அதிகரித்துள்ளதாக சில்லறை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளை முட்டை 22 ரூபாவுக்கு சிவப்பு முட்டை 23 ரூபாவுக்கு விற்னை செய்யப்படுவதாக அகில இலங்கை முட்டை விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
21 ருபா என்றே அடிப்படையில் முட்டைகளை பெற்றுக்கொடுக்க முடியுமென கொழும்பு பிரதேசங்களுக்குமுட்டை மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கோழி இறைச்சியின் விலையும் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். 460 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கோழிக்கறி தற்போது சில பகுதிகளில் 660 முதல் 710 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
முட்டை மற்றும் கறிக்கோழி இறைச்சி இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் மற்றும் கோழி இறைச்சி உற்பத்தி சார்\ பொருட்களின் விலை உயர்வு போன்ற காரணங்களால் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை உயர்ந்துள்ளதாக கோழி மற்றும் கோழிப்பண்ணை நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.