இறக்குமதி செய்யப்படும் எரிவாயுவின் தரத்தை பரிசோதனை செய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
நாட்டின் பிரதான எரிவாயு விற்பனை நிறுவனங்களான லிற்றோ மற்றும் லாஃப் எரிவாயு நிறுவனங்களின் கொள்கலன்களில் இருந்து நேற்றைய தினம் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன எனவும் குறித்த எரிவாயு மாதிரிகள் ஆய்வுகூட பரிசோதனைக்காக இன்று பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.