ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற சமையல் எரிவாயு சிலிண்டரிலிருந்து அடுப்புக்கு செல்லும் எரிவாயுக் குழாய் வெடித்ததில் பல்வேறு உணவுப் பொருட்கள் வீணாகியுள்ன.
ஹட்டன் – கொழும்பு வீதியில் புரூட்ஹில் பிரதேசத்திலுள்ள ஹோட்டலில் இன்று (29) இந்த வெடிப்புச்சம்பவம் இடம்பற்றுள்ளதாக ஹோட்டல் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், வாயு அடுப்பை இயக்கி ஒரு மணிநேரத்தின் பின்னர், சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் அடுப்பை இணைக்கும் குழாய் இவ்வாறு வெடியப்புக்குள்ளாகியுள்ளதாக தெரிவித்தார்.
அதன் பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் இந்த வெடிப்புச்சம்பவம் காரணமாக யாரும் காயமடையவில்லை என்றும் கோதுமை மா உள்ளடங்கிய உணவு பொருட்கள் வீணாகியுள்ளதகவும் அவர் தெரிவித்துள்ளார்.
(மனுர)