50 கிலோ கிராம் சீமெந்து பொதியின் விலை 177 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சியாம் சிட்டி சிமெண்ட் (லங்கா) லிமிடெட் உறுதிப்படுத்தியுள்ளது.
அதன்படி, சியாம் சிட்டி சிமெண்ட் (லங்கா) லிமிடெட் விநியோகிக்கும் சங்ஸ்தா மற்றும் மஹாவலி மெரின் வகையை சேர்ந்த 50 கிலோ கிராம் சீமெந்து மூடை ஒன்று 1275/- ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் என அந்த நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
முன்னதாக, 50 கிலோ கிராம் சீமெந்து பொதியின் விலையை 1,375 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சீமெந்து கம்பனிகள் தெரிவித்திருந்தன.
நேற்று நள்ளிரவு முதல் 50 கிலோ கிராம் சீமெந்து பொதியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக சீமெந்து கம்பனிகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.