அண்மையில் பேஸ்புக் தனது நிறுவனத்தின் பெயரை ‘மெட்டா’ என மாற்றி ரீபிராண்ட் செய்திருந்தது. தற்போது வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மாதிரியான தளங்களுக்கு மெட்டா தான் தாய் நிறுவனம். இந்நிலையில் ‘மெட்டா’ தங்களது நிறுவனத்தின் பெயர் என்றும், அந்த பெயரை களவாடிய பேஸ்புக் மீது வழக்கு தொடர உள்ளதாகவும் அமெரிக்காவின் சிகாகோவில் இயங்கி வரும் டெக் நிறுவனமான மெட்டா தெரிவித்துள்ளது.
இதனை மெட்டா நிறுவனத்தின் நிறுவனர் Nate Skulic அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். “எங்கள் நிறுவனத்தின் டிரேட் மார்க்கை அத்துமீறி பயன்படுத்த பேஸ்புக் முடிவு செய்துவிட்டது. அவர்களால் எங்களை வாங்க முடியவில்லை. அதன் காரணமாக மீடியா என்ற சக்தியை கொண்டு எங்களை அழிக்க அவர்கள் முடிவு செய்து விட்டார்கள். அதோடு அவர்களே அவர்களை ‘மெட்டா’ என அழைத்துக் கொண்டுள்ளனர். அதனால் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம்” என தெரிவித்துள்ளார் அவர்.
2016-இல் சிகாகோவை சேர்ந்த நிறுவனரும், 2015-இல் சான் ஜுக்கர்பெர்க் என இரண்டு முறை அமெரிக்காவில் டிரேட் மார்க் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த மூன்று மாதங்களாக இந்த பெயரை தங்களுக்கு கொடுக்கும்படி பேஸ்புக் நிறுவனம் நிர்ப்பந்தித்து வருவதாக Nate Skulic தெரிவித்துள்ளார்.