அரச கொள்கைக்கு மாறாக க்ளைபோசெட் தடையை நீக்கியமை தொடர்பில் கிருமிநாசினிகள் பதிவாளரை பதவி நீக்கி, அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானிக்கப்
பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.இதேவேளை, விவசாயத்துறை அமைச்சரினால் கிருமிநாசினிகள் பதிவாளர் பதவியிலிருந்து தன்னை நீக்க முடியாது என கலாநிதி ஜே.ஏ சுமித் குறிப்பிட்டுள்ளார்.
2014ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கான உரிய சட்ட அனுமதியை பெற்றே புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது அதனால் அமைச்சரால் தன்னை பதவியில் இருந்து நீக்கவோ, ஒழுக்காற்று நடவடிக்கை முன்னெடுக்கவோ முடியாது எனவும் பதிவாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.