நிதியமைச்சர் பசில் ராஜபக்ச வரவுசெலவுதிட்டத்தை சமர்ப்பிப்பதை அவரின் மூன்று சகோதரர்கள் முன்வரிசையில் அமர்ந்து அவதானிக்கும் படத்தை வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சா டிசில்வா மக்களின் சீற்றத்தை குறைப்பதற்கு இவர்கள் என்ன நடவடிக்கை எடுக்கப்போகி;ன்றார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்
தனது டுவிட்டர் பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது.
முன்வரிசையில் அமர்ந்துள்ளமூன்று ராஜபக்ச சகோதரர்கள் நான்காவது சகோதரர் தனது முதலாவது வரவுசெலவுதிட்டத்தை சமர்ப்பிப்பதை செவிமடுக்கின்றனர்.
பின்வரிசையில் உள்ள ராஜபக்சாக்கள் உட்பட ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்தவர்கள் மக்களின் சீற்றத்தினை குறைப்பதற்கு என்ன செய்யபோகின்றார்கள் என பார்ப்போம்