மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு நாளை (03) கொழும்பில் மேற்கொள்ளவுள்ள ஆர்ப்பாட்டத்தின் காரணமாக எந்த அடிப்படையிலும் மின்வெட்டு ஏற்படாது என்று மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் உறுப்பினர் சரித்த ஜயநாத் இன்று (02) தெரிவித்துள்ளார்.
மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பினால் நேற்று முன்னெடுக்கப்பட்ட கூட்டத்தில் மின் விநியோகத்துக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லையென்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகச் சரித்த ஜயநாத் தெரிவித்துள்ளாா். நாளை ஆர்ப்பாட்டம் மாத்திரமே முன்னெடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.