இரசாயன உரம், கிருமிநாசினி, திரவ உர இறக்குமதிக்கான அனுமதியை தனியார் துறைக்கு வழங்குவதாக விவசாயத்துறை
அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், இவைகளின் இறக்குமதிக்கு தடை விதித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் உடன் அமுலாகும் வகையில் இரத்துச் செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.