Our Feeds


Sunday, November 14, 2021

Anonymous

தென் கடற்பரப்பில் தாழமுக்கம் – நாளையாகும்போது வடக்கை நோக்கி நகரும் சாத்தியம்

 



சப்ரகமுவ, வடமேல்,மத்திய,வடக்கு மற்றும் மேல் மாகாணங்கள் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில பிரதேசங்களில் இன்று இடைக்கிடை மழைவீழ்ச்சி பதிவாகுமென வளிமணடளவில் திணைக்களம் தெரிவித்துள்ளது.


ஊவா மாகாணத்தில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் மாலை அல்லது இரவு சந்தர்ப்பங்களில் இடைக்கிடை மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகும்.

நாடு முழுவதும் இடைக்கிடை மணித்தியாலத்துக்கு 40 – 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என்றும் வளிமண்டளவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

தாழமுக்கம்

அதேபோன்று எதிர்வரும் 24 மணிநேரத்தில் தென் அந்தமான் கடற்கரை பிரதேசத்தை அண்மித்த பகுதிகளில் தாழமுக்கம் வலயம் உருவாகியுள்ளதாகவும் வளிமண்டளவில் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த தாழமுக்கம் உயர்வடைந்து மேல், வடமேல் திசையில் பயணிக்கும். நாளையாகும்போது (15) வடக்கு பிரதேசத்தை நோக்கி பயணிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அதன் பின்னர் இந்த தாழமுக்கம் வளர்ச்சியடைந்து மேல், வடமேல் பிரதேசங்களை நோக்கி எதிர்வரும் 18ஆம் திகதியாகும்போது இந்தியாவை அண்மித்த கடற் பிரதேசங்களுக்கு பயணிப்பதற்கான அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.


கிழக்கு மாகாண பிரதேசங்களில் ஆழ்கடல் மீனபடி நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மற்றும் கடற்படையினர் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் வளிமண்டளவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

காங்கேசன் துறையிலிருந்து மன்னார், புத்தளம் கொழும்பினூடாக காலி வரையிலான கடற்கரை பிரதேசங்களில் இடைக்கிடை மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகும். அநேகமான கடற்கரை பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகும்.

காற்றின் வேகம் 40 – 50 கிலோ மீற்றா் வேகத்தில் பயணிக்கும். காங்கேசன் துறையிலிருந்து மன்னார், கொழும்பு, கலியினூடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்கரை பிரதேசங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 55 -60 ஆக அதிகரித்துக் காணப்படும்.

இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகும் சந்தர்ப்பங்களில் காங்கேசன் துறையிலிருந்து மன்னார், கொழும்பு, காலியினூடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்கரை பிரதேசங்களில் கடுமையான காற்று நிலை உருவாகக் கூடும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் கடற்கரை பிரதேசங்களில் தாழமுக்கம் நிலைகொண்டிருக்கும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »