Our Feeds


Monday, November 1, 2021

SHAHNI RAMEES

பொருட்கள் விலைகள் மேலும் அதிகரிக்கலாம் மக்கள் இதனை உணர்ந்து செயப்பட வேண்டும்


 நாடு இன்று முகம் கொடுத்துள்ள நிலையில் பொருட்கள் விலைகள் மேலும் அதிகரிக்கலாம் மக்கள் இதனை உணர்ந்து செயப்பட வேண்டும் என நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவரும் பாராளுமன்று உறுப்பினருமான எஸ்.பி திசாநாயக்க தெரிவித்தார்.


நீர்பாசன துறை அமைச்சின் சுமார் 19 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் பூண்டுலோயா எரோல் கீழ்பிரிவு தோட்டத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.பி திசாநாயக்க தலைமையில் இன்று (31) நடைபெற்றது அதில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்து உரையாற்றும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், நாடு இன்று பெரும் கஸ்ட்டத்திற்கு மத்தியில் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. நாட்டுக்கு கிடைத்த வருமானங்கள் இல்லாது போய் உள்ள கொரோனா தொற்று பரவல் காரணமாக நாங்கள் நாட்டினை மாதக்கணக்கில் மூடி வைத்து தான் இந்த அளவு கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளோம். ஒரு நாளைக்கு நாட்டை மூடினால் 450 கோடி ரூபா நட்டம் ஏற்படுகிறது.

இந்நிலையில் நாங்கள் மாதக்கணக்கில் நாட்டினை மூடி வைத்திருந்தோம் இன்று எமக்கு கிடைக்க கூடி மிகப்பெரிய வருமானமான சுற்றுலாதத்துறை பாரிய அளவில் வீழ்ச்சிக்கண்டுள்ளது அதனுடன் தொடர்புடைய சுமார் 29 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதே நேரம் இன்னமொரு வருமானமாக இருந்து வெளிநாட்டில் உள்ளவர்கள் அனுப்பிய அந்நியச்செலவாணி இன்று இல்லாது போய் உள்ளது. இதனால் அந்த வருமானமும் எமக்கு கிடைப்பதில்லை. இதனை தவிர ஆடைத் தொழில் மூலம் கிடைக்கப்பெற்ற வருமானமும் இன்று கப்பல் போக்குவரத்து நடைபெறாதன் காரணமாக அந்த வருமானத்தினையும் இழந்துள்ளோம்.

ஆகவே நாம் பாரிய ஒரு நெருக்கடியான நிலையினையே சந்தித்துள்ளோம் கப்பல் கட்டணங்களும் பல மடங்காக அதிகரித்துள்ளன. ஆகவே பொருட்களின் விலைகளும் அத்தியவசிய பொருட்களின் விலைகளும் இன்னும் சில நாட்களில் மேலும் அதிகரிக்கலாம் வரலாற்றில் நாம் இவ்வாறான ஒரு நெருக்கடிக்கு 1971,1972 காலப்பகுதிகளில் சந்தித்திருக்கிறோம். அப்போது அரசி இரண்டு கிலோவுக்கு அதிகமாக கொண்டு சென்றாலும் பொலிஸார் கைது செய்யும் ஒரு காலம் காணப்பட்டது. கிழமை நாட்களில் அனுமதித்த தினத்தினை தவிர யார் வீட்டிலாவது சோறு சமைத்தால் பொலிஸார் கைது செய்தனர்.

இவ்வாறான நிலையிலும் மக்களின் அபிவிருத்தி பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எதிர்வரும் வரவு செலவு திட்டத்திலும் அபிவிருத்திக்காகவும் குடிநீர் பெற்றுக்கொடுப்பதற்காக பாரிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளன. ஆகவே இந்த நிலையினை மக்கள் உணர்ந்து செயப்பட வேண்டும் என அவர் இதன் போது தெரிவித்தார்.

-மலையக நிருபர் சுந்தரலிங்கம்-


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »