” நாட்டில் தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு நல்லாட்சி அரசு மட்டும் காரணம் அல்ல.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் இரண்டாம்வாசிப்புமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” நாட்டில் தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு நல்லாட்சியே காரணம் என இங்கு உரையாற்றியவர்களில் பலர் சுட்டிக்காட்ட முற்பட்டனர். நல்லாட்சியின் தலைவர் நான்தான். தற்போது இந்த அரசுடன் இருக்கின்றேன். மேற்படி கருத்து தவறானது.
நல்லாட்சி மட்டுமல்ல அதற்கு முன்னர் இருந்த அரசுகளும் காரணம். சுமார் 40 ஆண்டுகளாக இப்பிரச்சினை நீடிக்கின்றது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.” – என்றார்.