கேகாலை − ரொக்ஹில் − கஹடபிட்டிய பகுதியில் சமையல் எரிவாயு அடுப்பொன்று வெடித்து சிதறியுள்ளது.
இந்த சம்பவம் இன்று (28) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
வீட்டின் உரிமையாளர் அதிகாலையில் தேநீரை ஊற்றுவதற்காக நீரை அடுப்பில் வைத்த வேளையிலேயே இந்த சமையல் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியுள்ளது.
சம்பவத்தில் எவருக்கும், எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிய வருகின்றது.
எரிவாயு கசிவு இந்த வெடிப்புக்கான காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர்.
எரிவாயு சிலிண்டருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. (TC)