மாகாண சபை முறைமை இல்லாது ஒழிக்கப்பட வேண்டும் எனத் தேசிய காங்கிரசின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லா நேற்று (24) நாடாளுமன்றில் கோரியுள்ளார்.
மாகாண சபை முறைமையானது நாட்டின் பொருளாதாரத்துக்குச் சுமையாகும்.
மக்களின் பணம் இதனூடாக வீணடிக்கப்படுகிறது.
தமிழர்கள் என்றாலும் முஸ்லிம்கள் என்றாலும் நீண்டகாலமாக தங்களுடைய உரிமைகளுக்காகப் போராடிவருகிறார்கள்.
ஆனால் அதற்கு ஒரு முறைமை இருக்கிறது. மாகாண சபை முறைமையை இல்லாதொழித்து, புதிய அரசியல் யாப்பு ஒன்றைக் கொண்டுவர வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.