புத்தளம் – 2 ஆம் வட்டாரம் பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தில்லையடி பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
குடும்பத் தகராறு காரணமாகவே இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் 25 வயதான இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளதுடன், உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் இன்று (30) புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.