கொரோனா தொற்றின் காரணமாக மாணவர்கள் இழந்த கற்றல் நடவடிக்கைகளை மீண்டும் பெற்றுக்கெர்டுப்பதற்காக புதிய திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளதாக தேசிய கற்கை நிறுவனத்தின் பணிப்பாளா் நாயகம் கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன தெரிவித்தாா்.
அந்த திட்டத்துக்கமைய அத்தியாவசிய பகுதிகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.
இந்த உத்தேச திட்டத்துக்கமைய, 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் கல்வி கற்றும் மாணவர்கள் இழந்த கற்றல் நடவடிக்கைகளை மீளவும் ஆரம்பிக்கும் வேலைத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டம் நவம்பா் மாதம் முதல் மார்ச் மாதம் வரையில் அமுலாகும் வரையில் திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு சிலவேளை இந்த வேலைத்திட்டம் ஏப்ரல் மாதம் வரை நீடிக்கலாம். இந்த குறித்த காலப்பகுதியில் இந்த கற்கை நெறிகள் தொடர்ந்து இடம்பெறும். தரம் 3 , 4 மற்றும் 5 களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு அடுத்த வருடம் மே மாதம் முதல் டிசம்பா் மாதம் வரையில் அவர் தமது கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, 2022ஆம் ஆண்டு டிசம்பா் மாதமாகும்போது மாணவர்கள் தமது கற்றல் நடவடிக்கைகளை சாதாரண நிலைமைக்குக் கட்டியெழுப்பக் கூடியதாக இருக்கும். மாணவர்கள் இழந்த கற்றல் நடவடிக்கைகளிலிருந்து அடுத்த வகுப்புகளுக்கு செல்வதற்கான கல்வியை வழங்கவே தற்போது தீர்மானித்துள்ளோம்.
இந்த திட்டத்தை நிர்வாகிக்கும் முறை தொடர்பிலான சுதந்திரம் பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது, கல்வி அமைச்சு மற்றும் பரீட்கைள் ஆணையாளா் நாயகத்துடன் கலந்துரையாடியதன் பின்னரே இந்த யோசனையை முன்வைத்துள்ளோம். பரீட்சை இடம்பெறும் காலத்தை பொறுத்து இந்த வேலைத்திட்டத்தில் மாற்றம் ஏற்படலாம். கைவிடப்பட்ட பாடத்திட்டங்களில் முக்கிய பாடங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தவே இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதுள்ள வகுப்புகளிலிருந்து அடுத்த வகுப்புக்குச் செல்லும் போது பரீட்சை வைத்து மாணவர்களின் நிலை தொடர்பில் அறிந்துகொள்ள கூடியதாக இருக்கும்.
இதேவேளை கொரோனா தொற்று பரவல் நிலைமையின் காரணமாக மாணவர்கள் இழந்த கற்றல் நடவடிக்கைகள் தொடர்பில் தேசிய கற்கை நிறுவனத்தினால் மதிப்பீடொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, கல்வி இழப்பானது 2020ஆம் ஆண்டில் மேல் மாகாணத்தில் 55 சதவீதமும் ஏனைய மாகாணங்களில் 45 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது.
நடப்பாண்டில் ஜனவரி மாதம் முதல் இதுவரையில் மேல் மாகாணத்தில் 90 சதவீதமும், ஏனைய மாகாணங்களில் 70 சகவீதமும் கல்வி இழப்பு பதிவாகியிருக்கலாம் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளாா்.