Our Feeds


Monday, November 22, 2021

SHAHNI RAMEES

வீதியில் பறந்த பணம்: அள்ளிச் சென்ற மக்கள் (VIDEO)

 

அமெரிக்காவில், கனரக வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட்ட வங்கி பணம், டிரக் கதவு திறந்ததால் வீதியில் பறந்து செல்ல, அதனை பொதுமக்கள் அள்ளிச் சென்றனர்.


அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வங்கி ஒன்றின் பணம், கனரக வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட்டது.


அப்போது திடீரென் வாகனத்தின் கதவு திறந்து கொள்ள, வீதியில் பணம் பறக்க தொடங்கியது. இதனை கண்ட வாகன சாரதிகள், தங்கள் வாகனத்தை நிறுத்தி, பணத்தை அள்ளத் தொடங்கினர். இதனால் அந்த வீதி முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


பணத்தை எடுத்தவர்கள் திரும்ப தர வேண்டும் என அந்த வங்கி மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. பணத்தை மீட்கும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.


அந்த வீதியில் சென்ற வாகனங்களின் பதிவெண்களை கொண்டு பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பலர் நேர்மையாக முன்வந்து பணத்தை ஒப்படைத்துள்ளனர். அஜாக்கிரதையாக செயல்பட்ட கனரக வாகன சாரதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »