ரஜரட்ட பிரதேசத்தில், பெய்து வரும் மழை காரணமாக பெரும்பாலான சிறிய, நடுத்தர மற்றும் பெரிய நீர்த்தேக்கங்கள் நிறைந்து வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
மழை காரணமாக கலாவெவ நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதனால் கல்நேவ , ஹிரிப்பிட்டியாகம மற்றும் அவ்கன வீதி ஊடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்டுள்ளன.
இதனால் நீர்த்தேக்கத்தின் தாழ்நில பகுதியில் வாழ்ந்து வருவோர் அவதானத்துடன் செயல்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)