பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான இலங்கை சமசமாஜகட்சி அரசாங்கத்திலிருந்து விலகுவதற்குத் தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்தின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களின் அச்சுறுத்தல் மற்றும் அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள மக்கள் விரோத செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு வாய்ப்பு கேட்டிருந்த போதிலும் கட்சித் தலைவர்கள் அதுதொடர்பில் எந்த சாதகமான பதில் எதுவும் வழங்கவில்லை என்று சமசமாஜ கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளாா்.
இவ்வாறானதொரு நிலைமையின் மத்தியில் இந்த அரசாங்கத்துடன் கூட்டணி அமைத்திருக்கக் கூடாது என்பதே தனது நிலைப்பாடு என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளாா்.
அதற்கமைய, எதிர்காலத்தில் இடம்பெறவிருக்கும் கட்சி அரசியல் சபையில் ஆளும் தரப்பிலிருந்து விலகுவதற்கு யோசனை முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.