ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்புரிமையிலிருந்து தான் விலக்கப்பட்டமைக்கு எதிராக, பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே, உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றை இன்று (04) தாக்கல் செய்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியினால் தனக்கு எதிராக எட்டப்பட்ட தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமாறு, அவர் அந்த மனுவின் ஊடாக கோரிக்கை முன்வைத்துள்ளார்.